எமது தொலைநோக்கு
பொது மக்களின் திருப்தியானது முழுமையான அளவில் கிடைக்கக்கூடிய வகையில்
பயனுள்ள அரச சேவையினை பெற்றுக்கொடுக்கக் கூடியதான,
இலங்கையின் மிகச் சிறந்த பிரதேச செயலகமாக உருவாகுதல்.
எமது குறிக்கோள்
அதி சிறந்த வகையில் வளங்களை பெற்றுக் கொள்வதும் உபயோகிப்பதும்,
அரச கொள்கைகளுக்கு ஏற்புடையதான வகையில் வினைதிறனுடன் கூடிய
பயனுள்ள அரச சேவையினை பெற்றுக் கொடுத்தலும் பரந்த மக்கள் தொடர்புடன்
பேண்தகு சிறந்த திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்தி திட்டங்களை
நடைமுறைபடுத்துதல் மூலமாக
பிரதேச மக்களின் வாழ்கை தரத்தை உயரத்துதல்.
இரத்தினபுரி எனும் பெயர் ஏற்பட்டமைக்கான காரணங்கள் பலவாறு கூறப்படுகின்றன. இப்பகுதியில் பரந்த அளவில் காணப்படுகின்ற கிதுல் மரத்தினாலான கருப்பட்டியானது போர்த்துக்கேயரால் ராபடுர என அழைக்கப்பட்டு அது காலப்போக்கில் இரத்தினபுரி எனும் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைவிட இந்நகரம் இரத்தினத்திற்கு பிரசித்தி பெற்றதால் இப்பெயர் கொண்டது என்ற கருத்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்பு நகரிலிருந்து 101 கி.மீ தொலைவில் ஈசானி திசையில் அமையப்பெற்றுள்ள இரத்தினபுரி பிரதேசத்தில் பிரதான நகரமாக இரத்தினபுரி நகரம் காணப்படுகிறது. இரத்தினக்கல் அகழ்வு மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்களுக்கு பிரசித்தி பெற்ற நகராகும். இது மட்டுமன்றி விவசாய துறையில் நெல், பழங்கள் உற்பத்தியும் காணக்கூடியதாக உள்ளதுடன் தேயிலை இறப்பர் உற்பத்தியும் காணக்கூடியதாக உள்ளது. சுற்றுலா துறைசார் தொழில்களும் பரவலாக காணப்படுகிறது. சிவனொளிபாதம்,சபரதமுவ சமன் தேவாலயம், எஹெல்லேபொல வலவ்வ,கடுகஸ் எல்ல நீர்வீழ்ச்சி என்பன அந்நியர்கள் பார்வையிடக் கூடிய இடங்களாகும். 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையானது 105561 என்பதுடன் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் சகல வசதிகளுடன் கூடியதாக இரத்தினபுரி வைத்தியசாலை காணப்படுகிறது. நகரில் வாழும் பெரும்பாலானோர் இரத்தினக்கல் சார்ந்த கைத்தொழிழுடன் தொடர்புடையோராவர். பேரளவிலான உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரிகளும் இந்நகரை மையமாக்க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். காலநிலை வகையீட்டின் அடிப்படையில் இப்பிரதேசம் வெப்பமண்டல காலநிலையினை ஒத்த்தாகும். இப்பிரதேசத்தின் அமைப்பானது இலங்கையின் தென்மேற்கு பிராந்திய ஈரமண்டல வலைய அமைப்பாகும். மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரை வழக்கமான பருவநிலை காற்றின் மூலம் மழை கிடைக்கப்பெறுகின்றது. வருடாந்த மழைவீழ்ச்சியானது மி.லீ 4000-5000 இடைப்பட்டதாகும். வெப்பநிலை 24 தொடக்கம் 35 செல்சியஸ் வரை மாறுபட்டதாகும். களுகங்கையின் நிரம்பல் பகுதி இப்பிரதேசத்தில் அமையப்பெற்றதால் மே மாதம் தொடக்கம் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு அனைத்து வணக்கஸ்தளங்களும் அமையப்பெற்ற போதிலும் பௌத்த மத்த்தவர்கள் பெருமளவில் வசிப்பதால் அம்மதம்சார் தளங்கள் பெருமளவில் அமையப்பெற்றுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது.
சிவனொளிபாதம் (பௌத்தம்/இந்து)
சமன் தேவாலயம் (பௌத்தம்)
ஸாந்த லூக்ஸ் பள்ளி (இங்கிலாந்தர் பள்ளி)
சிவன் கோவில் (இந்து)
ஜும்மா பள்ளிவாசல் (இஸ்லாம் பௌத்தம்)
பிரதேச செயலாளர்களின் வரலாறு
| பெயர் | சேவை காலம் | வரை |
| திரு. ஏ.டீ தயாரத்ன | 1994.06.28 | 2006.02.03 |
| திரு.கே கருணாதிலக | 2006.02.06 | 2006.11.10 |
| திரு. எம்.எச் விக்கிரமசூரிய | 2006.11.13 | 2007.07.18 |
| திரு. ஏ.டீ தயாரத்ன () | 2007.07.19 | 2007.08.15 |
| திரு. ஜே.எம் தேவப்பிரிய விஜயராஜ | 2007.08.16 | 2010.06.18 |
| திருமதி சீ.எம் கோட்டவத்த | 2010.06.21 | 2017.12.02 |
| திருமதி ஐ.ஆர்.எம்.பீ.டீ இலுக்கும்புர | 2017.12.22 | 2018.08.25 |
| திருமதி ஐ.ஆர்.எம்.பீ.டீ இலுக்கும்புர | 2018.08.26 | இன்று வரை |














